Sunday, February 24, 2008

8-ம் வகுப்பு (பேய் மழையும் தேவதையும்)

பேய் மழை..

special class சீக்கிரம் விட்டச்சு..

rain coat மறந்து வந்ததால்...
மரத்தடியில் நின்றிருந்தேன்..
எப்போது மழை நிற்கும் என்று..

குடை இருக்கும் தைரியத்தில்
கிளம்பிவிட்டய் நீ..

மழை நிற்கும் என்று காத்திருந்த்தேன்..
நீ வந்து நின்று விட்டாய்..
என் அருகில்

முதல் முறையாய்,
மழை நிற்க கூடதென்று நினைத்தேன்.

நீ பேசத்தொடங்கினாய்...

கடந்து போன பட்டாம் பூச்சி - ஐ பார்த்து,
நீ பிடித்து அடைத்து விடுவித்த
பட்டாம் பூச்சிகள் பற்றியும்..

அடிக்கடி மறந்து போகின்ற
lunch box பற்றியும்..

கடைசியாய், அப்பா அழைத்து சென்ற
சினிமா படம் பற்றியும்..

அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடுகின்ற
உன் வீட்டு டீ.வீ பெட்டி பற்றியும்..

இந்த வார ஒலியும் ஒளியும்-ல்
நீ எதிர் பார்க்கும் பாடல் பற்றியும்..

கடைசியாய்..
பொங்கலுக்கு எடுத்த உனக்கு
பிடித்த மஞ்சள் பாவாடை சட்டையையும்..


"அட டா...
மழை முடிந்தது..
வெறும் தூரல் தான்
கிளம்புவோமா?"
என்றாய்..

உன்னோடு ஒரே குடைகுள்..
முக்கு தெரு வரைக்கும்..

நீ
என்னிடம் பேசிக்கொண்டு வந்தாய்..
நான் எனக்குள் பேசிக்கொண்டு வந்தேன்..


"நேரம் காலாமே தெரியாதா இந்த மழைக்கு.. "

"முக்கு தெருவாவது இன்னும் கொஞ்சம் தூரமாய் இருந்திருக்க கூடதா? "

"என் வீடுக்கு பக்கத்தில் உன் வீடு இருந்திருந்தால் என்னவாம்?"


அது என்னவோ. .

இப்பொழுதெல்லாம்...வேண்டுமென்றே..
rain coat மறந்து வருகிறேன்...school-க்கு

அதே மரத்தடியய் கடக்கிறேன்.

மழையும் வருவதில்லை ..
நீயும் வருவதில்லை..

நண்பர்களுக்கு எல்லாம்
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது...

மொத்ததில்,
பேய் மழையும் ,
என் தேவதையும் இனி
ஒன்றாய் வருவதில்லை போலும்..

Saturday, February 23, 2008

.

நேற்று,
கனக்கு வகுப்பில்
டீச்சர் என்னை (a+b)(a-b) கேட்ட போது..
பின்னால் இருந்து பதில் சொல்லி கொடுத்து மாட்டிக்கொண்டாய்..

குட்டு வெளிபட்டது..

எனக்கு (a+b)(a-b) தெரியாது என்பதல்ல

நானும் நீயும் ...Best Friends என்பது....

.

தாஜ் மஹால் -
உன் போல்
அழகாய் இருக்குமா?

Thursday, February 21, 2008

.

ஓடி வந்து என் பக்கத்தில்
உட்கார்ந்து கொண்டாய்.

மெல்லியதாக இடைவெளி விட்டு
உட்கார வேண்டுமென்றெல்லாம்
யார் சொல்லி தந்தது உனக்கு?

.


Tuesday, February 19, 2008

டாலி


Sunday, February 17, 2008

7-ம் வகுப்பு...

எப்ரல் மாதம்...

விடுமுறை காலம்.
திரும்ப வரும் போது
நீயும் நானும் வேறு section-ல் இருபோம்

அவசரதிற்க்கு பிட் அடிக்கவோ..
ஹோம் வொர்க் செய்யவோ..
உன்னை கேட்க முடியாது..

பேனாவில் ink தீர்ந்தாலோ..
Geomentry box மறந்து வந்தாலோ..
உன்னிடம் கடன் கேட்க முடியாது.

Maths டீச்சர் புரியாத algebra சொல்லித்தரும் போதோ..
தமி்ழ் miss இலக்கனம் சொ(கொ)ல்லி தரும் போதோ..
உன் பென்ச் வரை எட்டிப் பார்த்து,
என்ன செய்கிறாய் என்றுபொழுது போக்க முடியாது.

இன்டெர்வல் டயத்திலோ
லன்ச் ப்ரேக்கிலோ
நீ இன்று என்ன கொண்டு வந்திருப்பாய்
என்பதை கண்டுபிடிக்கும் போட்டி
நடத்திக் கொண்டிருக்க முடியாது..

நம் rickshaw man- ஓடு சண்டை போட்டு
என் அம்மா எனக்கு buss-pass வாங்கி கொடுத்ததால்
இனி
உன் சனி ஞாயிறு பற்றிய கதைகள்
எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாகது...

வழி நெடுக்க,
வழக்கம் போல் நீயகவே எல்லாம் பேசிவிட்டு..
என் வீட்டு வாசலில் - "வீடு வந்தாச்சு.."
என்று ஞாபக படுத்தலகாது..

இப்படியாக,
தொடங்க போகிறது
என் 7-ம் வகுப்பு.

.

நீ
பூச்சூடி வந்தாய்.

எனக்குத்தான் சந்தேகம்..
வாசம் வந்தது
பூவிலிருந்தா?
உன்னிலிருந்தா?

Saturday, February 16, 2008

.

நீ வரபோகிறாய்
என்கின்ற சந்தோஷதில்
சில நிமி்ஷங்களும்..
நீ வந்து விட்டாய்
என்கின்ற பரவசத்தில்
சில நிமி்ஷங்களும்..

உன்னை
பிரிய வேண்டியிருக்கிற
வருத்ததில்
மி்ச்ச நிமி்ஷங்களுமாய்
தொடங்கி நடந்து முடிந்து
போகிறது நம் சந்திப்புகள்.....

Thursday, February 14, 2008

.

சொன்னால் தான்
தெரியுமா எனக்கு
நீ
இப்படித்தான்
என்று.....

Monday, February 11, 2008

.

போகிற அவசரத்தில் சொல்ல மறந்த டாட்டாகளையும்
வந்த அவசரத்தில் சிந்த மறந்த புன்னகைகளையும்
சட்டை பை நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன்...

நீ
எனக்காக என்ன சேர்த்து வைத்திருக்கிறாய்?

.

நீ
சொர்கத்திற்கு போவயா?
நரகத்திற்கு போவயா?

எதுவயிருந்தாலும் சரி!

பக்கத்தில் ஒரு இடம்
போட்டு வையேன்
please.....

.

வெளியே
போகும்போது
மழையாகவோ,
குடையகவோ,
எடுத்துகொள்
என்
ஞாபகங்களை...