Sunday, February 17, 2008

7-ம் வகுப்பு...

எப்ரல் மாதம்...

விடுமுறை காலம்.
திரும்ப வரும் போது
நீயும் நானும் வேறு section-ல் இருபோம்

அவசரதிற்க்கு பிட் அடிக்கவோ..
ஹோம் வொர்க் செய்யவோ..
உன்னை கேட்க முடியாது..

பேனாவில் ink தீர்ந்தாலோ..
Geomentry box மறந்து வந்தாலோ..
உன்னிடம் கடன் கேட்க முடியாது.

Maths டீச்சர் புரியாத algebra சொல்லித்தரும் போதோ..
தமி்ழ் miss இலக்கனம் சொ(கொ)ல்லி தரும் போதோ..
உன் பென்ச் வரை எட்டிப் பார்த்து,
என்ன செய்கிறாய் என்றுபொழுது போக்க முடியாது.

இன்டெர்வல் டயத்திலோ
லன்ச் ப்ரேக்கிலோ
நீ இன்று என்ன கொண்டு வந்திருப்பாய்
என்பதை கண்டுபிடிக்கும் போட்டி
நடத்திக் கொண்டிருக்க முடியாது..

நம் rickshaw man- ஓடு சண்டை போட்டு
என் அம்மா எனக்கு buss-pass வாங்கி கொடுத்ததால்
இனி
உன் சனி ஞாயிறு பற்றிய கதைகள்
எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாகது...

வழி நெடுக்க,
வழக்கம் போல் நீயகவே எல்லாம் பேசிவிட்டு..
என் வீட்டு வாசலில் - "வீடு வந்தாச்சு.."
என்று ஞாபக படுத்தலகாது..

இப்படியாக,
தொடங்க போகிறது
என் 7-ம் வகுப்பு.

2 Comments:

Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்லா இருக்கு. மெல்லிய புன்னைகையோடு வாசித்து முடித்தேன்.. இது போல எல்லா வகுப்புக்கும் கவிதை எழுதுவீங்களா..ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்..

3:40 AM  
Anonymous Anonymous said...

மி்க்க நன்றி ரவி!
உங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிச்சயமாக..எல்லா வகுப்புகளுக்கும்
கவிதைகள் உண்டு.

நேரம் வரும் போது எழுதி பதிகிறேன்.

உங்கள் ஊக்கதிற்க்கு நன்றி.

3:15 AM  

Post a Comment

<< Home