Saturday, March 22, 2008


Friday, March 21, 2008

10th std - Study holidays



உன்னை பற்றி நினைக்கும் போதெல்லம்
உனக்கு விக்கலோ
பொறையோ
நேர்ந்து விட கூடும் என்பதால் மட்டும்

உன்னை நினைப்பதை
தற்காலிகமாக
தள்ளி வைத்திருக்கிறேன்.

ஏதாவது ஒன்று
எப்பொழுதும் உன்னை
ஞாபகப்படுத்துகின்ற போதும்.

கடைசியாய்
உன்னை
நியாபக படுத்தியது
இந்த நிலா !

.


உன்னை பற்றி
இன்னும் கொஞ்சம்
நான் பேசினால்...

உன்னக்கே bore
அடித்து விடக்கூடும்
உன்னை..

Wednesday, March 19, 2008

10th : வழக்கம் போல்..


நீ
எப்பொழுதும் என்னை
விட்டு விட்டு
போய் விடுகின்றாய்.

நீ
அழைத்து போகாவிட்டால்
நான்
தொலைந்து போய் விட
போவதொன்றும் இல்லை..

ஆனால்..
உன்னோடு வந்து செல்வது
வழக்கமான பின்
தனியே போவது என்னவோ
தண்டனை போல் இருக்கிறது..

இருந்தும் ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன்.

ration - கடையில் அரிசிக்காகவும்
theater- வாசலில் டிக்க்ட்காகவும்

காத்திருக்கும் சாமானியர்களை போல்..
உன்னோடு வருவதென்னவோ
நீ
கடைசியாக சொல்லுகின்ற
'டாடா' - வுக்காக.. மட்டுமே...
சரி... சரி.

அதற்காக நாளைக்கு
என்னை பார்த்தவுடனே எல்லாம்
'டாடா' சொல்லதே..

நீ நீயாகவும்
நான் நானகவும் இருப்பதில்
நிறைய சந்தோஷங்கள்
இருப்பதால்..

எப்பொழுதும் போல் நீ விட்டு செல்...
வழக்கம் போல்..

Friday, March 14, 2008

9-ம் வகுப்பு - C section

P.T class -
திடீரென்று காணாமல்
போனாய் நீ !

கொன்ச நாளாய்
class-க்கு வருவதில்லை
tution-கும் வருவதில்லை

உன் தோழிகளை
கேட்டால்
கேலியாய்
சிரித்து மழுப்பி விடுகிறார்கள்.

உன் வீட்டை தாண்டி
போகிறேன் அடிக்கடி...

திருவிழா கோலத்தில் உன் வீடு ..

நான் மட்டும் தான்
திருவிழாவில்
காணமல் போனாவன் போல்...

ஒரு வாரம் கழித்து
பாவடை சட்டையில் இருந்து
தாவணிக்கு
promotion உனக்கு
punishment எனக்கு.

பின்ன என்ன..எதுவுமே சொல்லமாடேன்கிறாய்...

"ஊரறிந்த ரகசியம்
உனக்கு மட்டும் என்ன?"
என்று
வெட்கத்தை என் மேல்
அள்ளி தெளிக்கிறாய்.

உன்னிடம் பிடிக்கதாதே..
உன் வெட்கம் தான்..
பின்ன என்ன..

போன வாரத்து புது வரவு.

என்னிடம் உன்னை
பேச விடாமல் செய்யுதே!

இனி,
உன் பக்கத்து சீட்டில்
உட்கார முடியாது!

ஏதாவது பொய் சொன்ன சாக்கில்.
தலையில் அடித்தோ
கையய் பிடித்தோ
சத்தியம் செய்ய முடியாது!

ஏதேட்சையாய்,
தெருவில் பார்தால்
பேசக்கூட முடியாது..
உன் அப்பதாவோ..
என் அப்பயியோ..திட்டகூடும்
உன்னயும் என்னையும் தனித்தனியே!!

home work நோட்டு
வாங்க அடிக்கடி
சாயங்காலத்தில் வரமுடியாது
உன் வீட்டுக்கு..

வாசல் கேட் திறக்கமலே
வழியனுப்பி விடகூடும்
நீ என்னை..

எனக்கும் மெல்லியதாய்
முளைத்து கொண்டிருகிறது
அரும்பு மீசை உன் போல் எந்த
ஆர்ப்பாட்டமும் செய்யாமல்..

Wednesday, March 12, 2008

8-ம் வகுப்பு அரை பரிட்சை

பரிட்சை ஹால்..

நீ
நிறைய மார்க்
வாங்குவதற்காக
additional sheet- களாய்
அடுக்கிக் கொண்டிருக்கிறாய்

நான்
ஒன்றாக உன்னோடு
பரிட்சை ஹால்
விட்டு வெளியே வருவதற்காக
additional sheet- களை
சேர்த்து கொண்டிருக்கிறேன்

இரண்டு மூன்று பேனாக்கள்
கொண்டு வந்திருந்தேன்.

நீ கேட்டாய்,

"அதிகம் படித்து வந்திருக்கிறாய் போல்.."
என்று.

"இல்லை.
உன் பேனா இங்க் தீர்ந்து போனால்
வேறு யாருக்கும் முன் உனக்கு
கடன் கொடுப்பதற்காக என்றேன்"

நீ
வந்த சிரிப்பை
அடக்கி கொண்டாய்..
நான்
வந்த
வெட்கத்தை
மறைத்து கொண்டேன்..

பொழுது போகாமல்
பேப்ப்ர் கட்ட கொடுத்த
thread -ல்
6 வது முடுச்சு
போட்டு கொண்டிருக்கிறேன்.

சீக்கிரம் வா!

இதற்கு மேல்
எழுதுவது போல்
நடிக்க கூட முடியாது
என்னால்...

நாளைய பரிட்சைக்கு
உன்னிடம் important question
கேட்டு தான்
எழுத வேண்டும்
bit பேப்பரில்..