Friday, July 28, 2006

அறிவிப்பு

நீ
தொலைத்துவிட்டு
தேடிகொண்டிருக்கிற
உன்
பூ போட்ட கைகுட்டை,
முதல் ரேங்க் வாங்கிய
மதிபென் அட்டை,
சிகப்பு யுனிபாரம்
ரிப்பன்,
1H மற்றும் 2H பென்சில்,

இவைகளுடன்
பத்திரமயிருக்கிறது நான்
திருடிக்கொண்டு வந்த
உன் மனசும்...

Thursday, July 27, 2006

தடயங்கள்..

நேற்று நீ உடுத்தி வந்த
பாவடை சட்டையையும்
உன்னையும்
காட்டி கொடுத்துவிட்டது

அம்மவுக்கு தெரியாமல்
என் டவுசர் பாகெட்டில்
ஒளித்துவைத்திருந்த உன்
உடைந்த வளையளின்
துண்டுகள்.

ஞாபகங்கள்..

நீயும் நானும்
ஓடிப்பிடித்து விளையாண்ட போது
கை நிறைய காயங்கள்..

தழும்புகளாவது
மிஞ்சியிருக்ககூடதா

உன் ஞாபகமாக நான்
வைத்துக்கொள்ள...

Tuesday, July 18, 2006

மழை !

எல்லோரும் மழைக்காக
குடை பிடிக்கிறார்கள்.

சிலர் குடைக்காக
மழை கேட்கிறார்கள்.

எல்லோரையும் மறந்து
தனக்காக
பெய்து கொண்டிருகிறது
மழை !!

Monday, July 17, 2006

3-ம் வகுப்பு 2-ம் முறை..

காதல் எல்லாம் தெரியது எனக்கு.

நீ 2-ம் வகுப்பு
இரண்டு முறை படித்தவள்.

3-ம் வகுப்பு முன்று முறை
இல்லை என்றாலும்
இன்னும் ஒரு முறை
படிப்பாய் என நினைத்தேன்.

சரியாக படித்தும்,
சரியாக எழுதாமல்

மீண்டும் 2-ம் வகுப்பில் நான்
உன் பெயர் கிறுக்கிய
பெஞ்களுக்கிடையில்...

காதல் எல்லாம் தெரியது எனக்கு.

தூக்கம்

உன் நினைவுகளில்
முன் இரவுகள் நீண்டு கிடக்கின்றன
பின் இரவுகள் சுருங்கிவிட்டன
பகல் கனவுகளிடம் பறிபோய் விட்டது..

இப்படி எதுவும் இல்லத நேரத்தில்
கிடைகிறது எனக்கு
தூக்கம் என்ற ஒன்று..

Sunday, July 16, 2006

கடிகாரம்

என் பொழுதுகள் எல்லம்
உன்னில் தொடங்கி
உன்னிலெயே
முடிந்து விடுகிறது

பின் எதற்காக கண்டுபிடிதார்கள்
இந்த கடிகாரத்தை எல்லாம்...

Thursday, July 13, 2006

நான்....

மழை பெய்யும் போது
குடையையும்
மழை இல்லத போது
குடையின் நினைவுகளையும்
சுமந்து செல்பவன்
நான்....