Friday, April 25, 2008

நேர‌ம் இப்பொழுது


இப்பொழுதெல்லாம்
என் கை க‌டிகார‌ம்..
நீ விட்டு போன‌ நேர‌த்தை யோ...
அல்ல‌து
உன் ச‌ந்த்திக்க‌ மிச்ச‌ம் இருக்கும் நேர‌த்தை யோ..
ம‌ட்டும் காட்டுகிற‌து..

இப்பொழுது நேர‌ம்
00:20..

உன‌க்கு
என்னை
ஞாப‌க‌ப‌டுத்துவ‌த‌ற்காக‌
நான்
எதையும் செய்வ‌தில்லை.
அப்ப‌டி நீ
ஞாப‌க‌ப‌டுத்தியா
உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
23 ம‌ணி நேர‌த்து..சொச்ச‌ நிமிஷ‌ங‌க‌ளிலும்.

உன்னை
க‌ட‌ந்து போகும் போது
பார்த்தேன்...

நீ என‌க்காக‌ என்ன‌வோ
கிறுக்கி கொண்டிறுக்கிறாய்.

ம்..
நிச்ச‌ய‌ம் அது என‌க்காக‌ தான்.
வேறு எத‌ற்காக‌வும்..
இப்ப‌டி சிரிப்ப‌வ‌ள்..அல்ல‌வே நீ

Please..அடிக்க‌டி
க‌ன‌வு கானாதே...

என‌க்கு நிறைய‌
வேலை இருக்கிற‌து..

எப்பொழுதும்
உன் க‌ன‌வுக்க்குள்
வ‌ந்து
உன்னோடு
விளையாண்டு
கொண்டிருக்க‌
முடியாது...

என‌க்கு நிறைய‌
வேலை இருக்கிற‌து..

Thursday, April 17, 2008


.

ம‌ழை வ‌ந்தால்
"ம‌ழைக்கால‌ம்"
வ‌ச‌ந்த‌ம் வ‌ந்தால்
"வ‌ச‌ந்த‌ கால‌ம்"

ச‌ரி.

நீ வ‌ரும் கால‌த்தை.
என்ன சொல்லிஅழைப்ப‌து?

Tuesday, April 15, 2008







Monday, April 14, 2008


Saturday, March 22, 2008


Friday, March 21, 2008

10th std - Study holidays



உன்னை பற்றி நினைக்கும் போதெல்லம்
உனக்கு விக்கலோ
பொறையோ
நேர்ந்து விட கூடும் என்பதால் மட்டும்

உன்னை நினைப்பதை
தற்காலிகமாக
தள்ளி வைத்திருக்கிறேன்.

ஏதாவது ஒன்று
எப்பொழுதும் உன்னை
ஞாபகப்படுத்துகின்ற போதும்.

கடைசியாய்
உன்னை
நியாபக படுத்தியது
இந்த நிலா !

.


உன்னை பற்றி
இன்னும் கொஞ்சம்
நான் பேசினால்...

உன்னக்கே bore
அடித்து விடக்கூடும்
உன்னை..

Wednesday, March 19, 2008

10th : வழக்கம் போல்..


நீ
எப்பொழுதும் என்னை
விட்டு விட்டு
போய் விடுகின்றாய்.

நீ
அழைத்து போகாவிட்டால்
நான்
தொலைந்து போய் விட
போவதொன்றும் இல்லை..

ஆனால்..
உன்னோடு வந்து செல்வது
வழக்கமான பின்
தனியே போவது என்னவோ
தண்டனை போல் இருக்கிறது..

இருந்தும் ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன்.

ration - கடையில் அரிசிக்காகவும்
theater- வாசலில் டிக்க்ட்காகவும்

காத்திருக்கும் சாமானியர்களை போல்..
உன்னோடு வருவதென்னவோ
நீ
கடைசியாக சொல்லுகின்ற
'டாடா' - வுக்காக.. மட்டுமே...
சரி... சரி.

அதற்காக நாளைக்கு
என்னை பார்த்தவுடனே எல்லாம்
'டாடா' சொல்லதே..

நீ நீயாகவும்
நான் நானகவும் இருப்பதில்
நிறைய சந்தோஷங்கள்
இருப்பதால்..

எப்பொழுதும் போல் நீ விட்டு செல்...
வழக்கம் போல்..