Saturday, December 29, 2007

6-ம் வகுப்பு

உனக்கும் எனக்கும் எப்பொழுதும்
ஒத்து வருவதே இல்லை

வரிசையில் நிற்கும் போதும் சரி
பரிட்சை ஹாலில் உட்கரும் போதும் சரி

உயர வரிசையில் நின்றால்..உயரமாய் இருக்கிறாய்

தினமும் ஸ்கிப்பிங் செய்திருக்கிறேன்
Complan குடித்திருக்கிறேன்....

கடைசியில் ஹீல் வைத்த shoe கூட
போட்டு பார்த்தேன்...

இப்படி எதுவுமே செய்யாமல்,
நீ இன்னும் உயரமாகி விட்டாய்.

அகர வரிசையில் நின்றால்..கடைசியில் வருகிறாய்

உன் பெயர் இப்படிதான் தொடங்கும் என்று
எனக்கு எப்படி தெரியும்..
அப்பாவிடம் சொல்லி என் பெயரையும்
மாற்றி வைக்க.. சொல்ல

கடைசியாய் நீ ஹோம் வொர்க் நோட்டு
கொண்டு வர மறந்து போன ஒரு நாள்
நானும் நீயும் மட்டும் நீல்-ட்வுன்
செய்து கொண்டிருந்தோம்

ஒரே சந்தோஸ்ம் எனக்கு.

யாரோ உன் நோட்டை கண்டுபிடித்து
கொண்டு வந்து கொடுக்க...

மீண்டும்..

உனக்கும் எனக்கும் எப்பொழுதும்
ஒத்து வருவதே இல்லை

1 Comments:

Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//கடைசியாய் நீ ஹோம் வொர்க் நோட்டு
கொண்டு வர மறந்து போன ஒரு நாள்
நானும் நீயும் மட்டும் நீல்-ட்வுன்
செய்து கொண்டிருந்தோம்

ஒரே சந்தோஸ்ம் எனக்கு.//

ha ha..ரசிச்சுப் படிச்சேன்..காதல் கவிதைகளில் வித்தியாசமான புலம்பல் :)

1:21 PM  

Post a Comment

<< Home